விஜயின் உடல் எடை திடீரென அதிகரிப்பு - என்ன காரணம் தெரியுமா?
விஜய் உடல் எடை கூடியது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
விஜய்
எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி திரைப்படம். பின் நடிப்பில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார்.
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
வைரல் க்ளிக்ஸ்
அதில் உடல் எடை கூடி காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அதுகுறித்து கேள்விகளை குவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்திற்காக தான் விஜய் உடல் எடை கூடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் விஜய் 55 வயது நபராக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.