நடிகர் மன்சூன் அலிகானின் மகன் கைது - 12 மணி நேர விசாரணை!
போதை பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள்
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்(26) கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 12 மணி நேரம் அலிகான் துக்ளக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த அலிகான் துக்ளக்கை தனிப்படை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
அலிகான் துக்ளக் கைது
அவருடன் மேலும் 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரபலமான கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்த அலிகான் துலக், தற்போது சினிமா உதவி இயக்குநராகப் பணி செய்து வருகிறார்.
அவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்தியதோடு, சினிமா துறையினர், கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள், இளைஞர்கள் உட்பட பலருக்கும் அதை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.