விஜய் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழா..நிகழ்ச்சியை தவிர்த்தது ஏன்? திருமா விளக்கம்!
விஜய் பங்கேற்கும் 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய்
அம்பேத்கர் பிறந்தநாளான டிசம்பர் 6 ஆம் தேதி இன்று எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த புத்தகத்தை விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்துள்ளார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல் வெளியானது.
திருமா
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தவிர்த்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழ்நாடு அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர்,|எப்படி நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்? என்று கூறியுள்ளார்.
பாதாள உலகத்தை காட்டி எதிர்க்கட்சி அரசியலை அடக்கும் அநுர அரசு : அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர் IBC Tamil
முஸ்லிம் பாதாள குழுவிலிருந்து கொலை அச்சுறுத்தலாம் : அமைச்சர் தர பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர் IBC Tamil