இனிமேலும் மறைக்க முடியாது - நிச்சயதார்த்த rumuors..! போட்டுடைத்த விஜய் குடும்பத்தினர்..!

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் தேவரக்கொண்டா - ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நிச்சயதார்த்தம் குறித்து தொடர்ந்து தகவல்கள் நேற்று முதல் வெளியாகி கொண்டே உள்ளன.
விஜய் - ராஷ்மிகா
இந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசு கிசுக்கள் எழுந்து வருகிறது.
கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது.
திருமணம்?
சமீபத்தில், இந்த ஜோடி விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற புகைப்படங்கள், இருவரும் சுப நிகழ்ச்சிகளை ஒரே வீட்டில் கொண்டாடியதாக பரவிய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இருவரின் திருமணத்திற்கு வீட்டார்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பிப்ரவரி 2வது வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி நேற்று முதல் பெரும் வைரலானது.
விளக்கம்
இந்நிலையில், தான் இது குறித்து விஜய் தேவாரக்கொண்டாவின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, இந்த செய்திகள் அனைத்தும் தவறானது என மறுத்துள்ள அவர்கள், அது போன்ற எந்த முடிவுகளும் தற்போது வரை எந்தவித நகர்வுகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.