விஜய் மனைவி சங்கீதாவின் முன்னாள் காதலர் இந்த பிரபல நடிகரா..? தீயாய் பரவும் செய்தி..!

Karthick
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது அரசியல் பக்கம் நகர்கிறார் விஐய்.
விஜய் - சங்கீதா
பொதுவெளியில் முக்கிய நபராக விஜய் இருப்பதால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தொடர்ந்து பல கதைகள் வளம் வந்து கொண்டே தான் இருக்கின்றது. விஜய் சங்கீதா பிரிந்து விட்டார்களா..? விஜயுடன் மகன் பேசுவதில்லையா...? என்றெல்லாம் சமீபத்தில் கூட பல கதைகள் எழுதப்பட்டன.
ஆனால், அவையாவும் உண்மையா..? என்று நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான், தற்போது விஜய்யின் மனைவி சங்கீதா குறித்த செய்தி ஒன்று வைரலாகிறது. தற்போதும் அது குறித்து பேசியிருப்பது பயில்வான் தான்.
முன்னாள் காதலர்..?
பட நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அவர், ஜெய் ஆகாஷ் பற்றிய கிசுகிசு ஒன்று சொல்லப்போகிறேன் என குறிப்பிட்டு, அது முற்றிலும் உண்மையான தகவல் என கூறி ஜெய் ஆகாஷ் லண்டனில் இருந்து வரும் போது ஒரு பெண்ணுடன் வந்தார் என்றும் அந்த பெண்ணும் இவரும் காதலித்தனர் என்று கூறினார்.
ஆனால் கடைசியில் அந்த பெண் இவரை கழட்டிவிட்டு மாஸ் ஹீரோ ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதை சொன்னவுடன் நடிகர் ஜெய் ஆகாஷ் உடனடியாக பயில்வான் அருகில் வந்து இது பொய்யான தகவல் என்று கூறினார்.
லண்டன் - மாஸ் நடிகர் போன்றவற்றை தொடர்புபடுத்தி தற்போது பலரும் அது சங்கீதா தான் என கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.