பூதாகரமாகும் விவகாரம்; த்ரிஷா-விஜய் உறவு உண்மையா? என்ன நடக்குது!
விஜய்யின் பிறந்தநாளுக்கு த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய்-த்ரிஷா
கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் பெரிதாக மக்கள் மனம் கவர்ந்தவர்கள் விஜய்யும், த்ரிஷாவும் தான். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர், அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார்.
பரவும் வதந்தி
சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி விஜய்யுடன் லிஃப்ட்டில் இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கூடவே பதிவிட்ட ஆங்கில பாடலில், நீதான் என் காதல்.. என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல் என்றெல்லாம் வரிகள் இடம்பெற்றிருந்தது.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. அதேசமயம் பல வதந்திகள் பரவியது. இதனைத் தொடர்ந்து, த்ரிஷா இருந்த பயண லொகேஷன்களில் விஜயும் இருந்தது சில போட்டோக்கள் மூலம் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
த்ரிஷாவின் பழைய படங்களில் விஜயின் ஷூ தெரிகிறது. அதே காலகட்டத்தில் விஜய் பயணம் செய்த போது அணிந்த கருப்பு வெள்ளை ஷூ.
இது விஜய் அரசியலுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.