மனைவி சங்கீதாவின் ஆசைக்காகவே விஜய் நடித்த அந்த படம் - அதுல அவ்வளவு பிரச்சனை!
மனைவியின் ஆசைக்காக விஜய் நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 68ஆவது படத்தில் நடித்துவருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார்.
மனைவியின் ஆசை
இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய் தனது மனைவி சங்கீதாவின் ஆசைக்காக ஒரு படத்தில் நடித்தது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
சங்கீதாவுக்கு ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ரொம்பவே பிடிக்குமாம். எனவே அவரது இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வரை தனது ஆசையை விஜய்யிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்துள்ளார்.
அதனையடுத்து, ஏ.எல்.விஜய்யை அழைத்து கதை இருக்கிறதா என விஜய் கேட்க தலைவா கதையை கூறியுள்ளார். அதன்பின் அதில் நடித்துள்ளார். அந்தப் படம் வெளியாவதற்கு முன் பெரும் சவால்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.