விஜய்-சங்கீதா விவாகரத்து - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!
நடிகர் விஜய் தனது மனைவியுடன் விவாகரத்து செய்யப்போவதாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஜய்-சங்கீதா
பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தது. படக்குழுவினரை போலவே விஜய் ரசிகர்களும் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக .படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் , கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய் தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
முற்றுப்புள்ளி
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராதது மற்றும் இயக்குனர் அட்லி வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால் அவர் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது.
இது அவர் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது .
இதனிடையே விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்க்க வந்துள்ளார். இந்தச் செய்தி அவர் ரசிகர்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்துள்ளது.
சாதாரணதர பரீட்சை : 09 ஆம் தரத்தில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சாதித்த மாணவன் : குவியும் வாழ்த்துக்கள் IBC Tamil