80 வயது பூர்த்தி... தாய், தந்தை யாகபூஜைக்கு வராத நடிகர் விஜய்... - திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
சஷ்டியப்த பூர்த்தி விழா
சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.சந்திரசேகருக்கும், தாய் ஷோபாவிற்கும் திருக்கடையூரில் 80வது சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது. தன்னுடைய 80வது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். ஆனால், இந்த விழாவிற்கு விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம் என பதிவிட்டுள்ளார். தற்போது இவர்களது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் கண்டனம்
அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்னதான் பணம், புகழ் இருந்தாலும் தன் மகன், பேரப்பிள்ளைகள் இல்லாத சோகம் இவர்கள் இருவர் முகத்தில் உள்ளது... மகன் மருமகள் பேரன் எல்லாரும் சேர்ந்து சிறப்பாக நடத்தி வைக்கக்கூடிய பங்க்ஷன் இது ஆனால் இப்போ இதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இவ்வளவு சுயநலவாதியா இருக்கக்கூடாது மிஸ்டர் விஜய்... என்று சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம்.? pic.twitter.com/S6xGhYPPDa
— S A Chandrasekhar (@Dir_SAC) July 5, 2022
பிரபல திரைப்பட எடிட்டர் கவுதம் ராஜு உயிரிழந்தார் - அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்