எல்லாத்துக்குமே அவ திட்டுவா - த்ரிஷா முன்பே மனைவி சங்கீதா குறித்து பேசிய நடிகர் விஜய்!
விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 GOAT திரைபடத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்த வண்ணம் உள்ளனர்.
கல..கல தகவல்
இதற்கிடையில், இவரது மனைவி சங்கீதா லண்டனில் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து செய்யவுள்ளனர் என்ற செய்திகள் சமீப காலமாக பரவிய வண்ணம் உள்ளது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது மனைவி குறித்து விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில், காஃபி வித் அனுவில் அவரும் திரிஷாவும் கலந்துகொண்டனர்.
அப்போது அனுஹாசன் விஜய்யிடம், 'உங்கள் மனைவி உங்களை என்ன சொல்லி திட்டுவார்' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், அவ எல்லாத்துக்கும் திட்டிக்கிட்டேதான் இருப்பா என ஜாலியாக பதிலளித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil