தமிழக வெற்றி கழகம்: தேர்தலில் யாருக்கு ஆதரவு? விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே வலம் வந்த வண்ணம் இருந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு, பயிலகம், நூலகம், நிவாரண உதவிகள் என அதை நோக்கியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

அண்மையில் சென்னை பனையூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

அதன்படி, தற்போது தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சி பதிவு செய்யப்பட்டு தமிழக வெற்றி கழகம் என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை.
அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil