விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவர்தான்? தீயாய் பரவும் தகவல்!

Vijay Tamil Cinema
By Sumathi Feb 04, 2024 10:44 AM GMT
Report

விஜய் தான் கமிட்டாகியுள்ள கடைசி படன் குறித்த தகவல் பரவி வருகிறது.

 நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 GOAT திரைபடத்தில் நடித்து வருகிறார்.

actor vijay

தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கமிட்டாகிவுள்ள படங்களின் பணிகளை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுப்படவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்த வண்ணம் உள்ளனர்.

எல்லாத்துக்குமே அவ திட்டுவா - த்ரிஷா முன்பே மனைவி சங்கீதா குறித்து பேசிய நடிகர் விஜய்!

எல்லாத்துக்குமே அவ திட்டுவா - த்ரிஷா முன்பே மனைவி சங்கீதா குறித்து பேசிய நடிகர் விஜய்!

தளபதி 69

இதற்கிடையில், தளபதி 69 படத்தை யார் இயக்க போகிறார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பெரிதும் வாய்ப்பு இருப்பதாகவும், விஜய்க்கு அவர் ஒரு கதை கூறி இருப்பதாகவும் தெரிவந்துள்ளது. அதேபோல், அட்லீ, வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் பெயர்களும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.

விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவர்தான்? தீயாய் பரவும் தகவல்! | Vijay 69Th Movie Director Update Viral

தெலுங்கு தயாரிப்பாளர் DVV Entertainment தயாரிப்பில் விஜய் கமிட்டாகியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.