திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன் - புலம்பும் இயக்குநர்கள்.!

Nayanthara Vignesh Shivan Marriage
By Thahir Jun 23, 2022 07:54 PM GMT
Report

நடிகை நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் பல கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் அறிமுகம்

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.  

திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன் -  புலம்பும் இயக்குநர்கள்.! | Vignesh Sivan Conditioned Nayantara

திருமணம் 

விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன் -  புலம்பும் இயக்குநர்கள்.! | Vignesh Sivan Conditioned Nayantara

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் அதீத அக்கறை நயன்தாரா மீது காட்டுவது தற்போது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போதெல்லாம் நயன்தாரா படப்பிடிப்பில் அதிக கண்டிஷன் போட்டு வருகிறாராம்.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் O2 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் பஸ் மண்ணில் புதைந்து விடும். அந்த காட்சி எடுக்கும்போது என் மீது மண் படக்கூடாது என நயன்தாரா ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாராம்.

திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன் -  புலம்பும் இயக்குநர்கள்.! | Vignesh Sivan Conditioned Nayantara

இதற்கு முன் நயன்தாரா படத்திற்கு எது தேவையோ அப்படி நடித்து வந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் வந்த பிறகு வேறு ஒரு விதத்தில் மாறியுள்ளார் என அனைவரும் கூறிவருகின்றனர்.