இந்தியர்களுக்கு விசா தேவையில்லை..! இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து அறிவிக்கப்போகும் நாடு?
விசா இல்லாமல் வியட்நாமிற்குள் இந்தியர்களை அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசா தேவையில்லை
தங்கள் நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக இலங்கை அரசு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்கப்படும் தெரிவித்தது.
மேலும், இது சோதனை முயற்சியாக 2024 மார்ச் 31ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது என்று இலங்கை அரசு அறிவித்தது. இதனால் அந்த நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து, தாய்லாந்து நாட்டு சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில் "2023 நவம்பர் 10 முதல் 2024 மே 10ம் தேதி வரை தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.
வியட்நாம்
30 நாட்கள் விசா இல்லாமல் தாங்கிக்கொள்ளலாம்" என தெரிவித்தது. இந்நிலையில், ஆசிய நாடுகளிலேயே மிகவும் அழகான நாடு என்று அறியப்படும் வியட்நாம் நாடும் அதே வழியில் இறங்கியுள்ளது.
இந்தியர்களை விசா இல்லாமல் வியட்நாமிற்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக வியட்நாம் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அந்நாட்டு அரசு விரைவில் வெளியிட உள்ளது.
தற்சமயம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாநது ஆகிய நாட்டவர்களை மட்டுமே விசா இல்லாமல் வியட்நாமுக்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.