அதிசயம் ஆனால் உண்மை: உலகில் மழையே பெய்யாத கிராமம் இதுதான் - என்ன காரணம்?
உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமமும், அதற்கான காரணமும்.
மழை பெய்யாத கிராமம்
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் 'அல்-ஹுதைப்' என்ற இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமமானது ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில், தரைமட்டத்திலிருந்து தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த இடம் உயரமாக இருந்தாலும் வறட்சியுடன் தான் காணப்படுகிறது. அல் ஹுதைபே கிராமத்தில் எப்போதும் மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படும். பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் இறங்குகிறது. காலை சூரியன் உதிக்கும்போது மீண்டும் வானிலை வெப்பமடைகிறது.
என்ன காரணம்?
இந்த கிராமத்தில் ஏன் மழை பெய்வதில்லை என்பது குறித்து காரணமாக சொல்லப்படுவது "இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் அந்த மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது.
அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன. மேலும், அல் ஹுதைப் கிராமம் சமவெளியிலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது. சாதாரண மழை மேகங்கள் சமவெளியிலிருந்து 2000 மீட்டருக்குள் குவியும்.
எனவே அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை. மேகங்கள் இல்லையென்றால் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் தான் இந்த கிராமத்தில் மழை பெய்வதில்லை என்று கூறப்படுகிறது.