இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்'னா நீலகிரிதான் - இங்கு சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!

Tamil nadu
By Jiyath Aug 19, 2023 11:21 AM GMT
Report

நீலகிரி மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பற்றி பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம்

பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலென, மரங்கள், மலைகள், நீர் வீழ்ச்சிகள்,அருவிகள்,தேயிலைத் தோட்டங்கள், மாசு இல்லாத சுற்றுச்சூழல், மூடு பனி, தாவர வகைகள், வன விலங்குகள், பறவையினங்கள், என இயற்கை காட்சி அளிக்கும் ஒரு மாவட்டம் தான் நீலகிரி.

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான சந்திப்புப் புள்ளியாகும். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி இங்குதான் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது.

நீலகிரி ஆனது கடல் மட்டத்திற்கு 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் அழகான சுற்றுச் சூழல் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இந்த மாவட்டத்தில் அவசியம் சுற்றிப்பார்க்க வேண்டிய 7 சுற்றுலாத் தலங்களை பற்றி பார்ப்போம்.

முதுமலை தேசியப் பூங்கா

இது நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி மற்றும் ஜங்கிள் ரெய்டு ஆகியன உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை அழைத்துச் சென்று யானை, புலி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகளை காண்பித்து வருகின்றனர். இங்கே வன விலங்குகளை எளிதாக பார்க்க முடியும்.

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

காட்டு யானை, வளர்ப்பு யானை , புள்ளிமான், புலி சிறுத்தை கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளுக்கு இந்த முதுமலை வனப்பகுதி வாழ்விடமாக உள்ளது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்ட முறையான சவாரி வசதிகளும் உள்ளன. இதேபோன்று கூடலூர் பகுதியில் உள்ள ஊசிமலை, தவளை மலை, நடுவட்டத்தில் உள்ள ஆங்கிலேயர் கால சிறைச்சாலை ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

அவலாஞ்சி

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

இந்த இடம் ஊட்டியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த வழியில்தான் எமரால்டு வனம் உள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத இடம் இதுவாகும். பசுமையும், அழகும் நிறைந்த இந்த இடத்திற்கு பாலடா, இத்தலார், எமரால்டு வழியாக செல்லலாம். அவலாஞ்சி என்று அழைக்கப்படும் இந்தக் குன்றின் மீது நின்று பார்த்தால் ஓடும் நதியும் பசுமையின் குவியலாய்த் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கும் குளிர்ந்த நீர்த்தேக்கங்களும் பளிச்செனத் தெரியும்.

தொட்டபெட்டா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை இதாகும். இது ஊட்டியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2,637 மீட்டர் உயரம் கொண்ட உதகையின் மூடுபனி, பச்சை பள்ளத்தாக்குகளுக்கு மேலே உயர்ந்த தொட்டபெட்டா," பெரிய மலை " என்ற தனித்துவமான அடையாளத்தோடு நிற்கிறது.

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

இங்கிருந்து சாமுண்டி மலையையும் குல்குடி, கடல்தடு மற்றும் ஹெகுபா சிகரங்களையும் காண முடியும். இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. குளிர்காலங்களில் உதகையை விட அதிகமாகவே இங்கு குளிர் நிலவுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நாளொன்றுக்கு சுமார் 3500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். சிகரத்தின் உச்சியில் அழகான பூங்காவும் சுற்றுலாத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பைகாரா

ஊட்டியிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள பைகாரா, பயண பிரியர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஏற்ற இடமாக உள்ளது. இங்கு அமைந்துள்ள நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

முக்கூர்த்தி மலை உயரத்திலிருந்து உருவாகும் இந்த பைகாரா நீர்வீழ்ச்சி பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே பாய்கிறது. ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பைக்காரா நீர்வீழ்ச்சியை நீங்கள் பார்வையிடலாம். இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பார்வையாளர்கள் பைக்காரா ஏரியில் படகுப் பயணம் மேற்கொள்ளலாம், அருவியின் உச்சிக்கு மலையேற்றம் செய்யலாம். முகாம்கள் அமைத்தும் இங்கு தங்கலாம்.

ரோஸ் கார்டன்

ஊட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரோஸ் கார்டன் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல்வேறு வகையான ரோஜாக்களை பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் தமிழ்நாடுதோட்டக்கலைத்துறையால் 1995 ஆம் ஆண்டு இந்த தோட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரு, சண்டிகர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஊட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட 3800 இரகங்களைச் சார்ந்த 25,000 ரோஜாச் செடிகள் இத்தோட்டத்தில் தழைத்துள்ளன.

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

பார்வையாளர்கள் சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களைக் காணலாம். தேயிலை ரோஸ், ஹைப்ரிட் டீ ரோஸ், புளோரிபூண்டா ரோஸ், மினியேச்சர் ரோஸ் மற்றும் ராம்ப்ளர்ஸ் ஆகியவை தோட்டத்தில் காணப்படும் மிகவும் பிரபலமான வகைகளில் சில. ரோஜாக்களின் அழகை வெளிப்படுத்தும் வகையில் தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு அமைதியான சூழலையும் வழங்குகிறது.

எமரால்டு ஏரி

ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இந்த எமரால்டு ஏரி அமைந்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்துள்ள அமைதியான பள்ளத்தாக்கில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் பலவகையான மீன்கள், கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் பறவைகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

இந்த ஏரிக்கு அருகில் இருந்து கதிரவன் தோற்றத்தையும், மறைவையும் காணுவது கண்ணுக்கினிய காட்சி என அறியப்படுகிறது. ஏரியைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்துள்ளன, இங்கு பார்வையாளர்களால் தேயிலைப் பொருட்களை வாங்க முடியும்.

உதகை ஏரி படகு இல்லம்

இந்த ஏரி ஊட்டியின் முதல் ஆணையராக இருந்த ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். 1824 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏரி இப்போதும் ரம்மியத்தோடு காட்சி அளிக்கிறது. பெடல் படகுகள், ரோ படகுகள், அக்குவா பைக்குகள் போன்றவற்றை இந்த ஏரியில் ஓட்டி மகிழலாம்.

இயற்கை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம்

அதுமட்டுமல்லாமல் மினி ரயில், டான்சிஸ் கார்கள் என்று குட்டீஸ்களின் குதூகலத்தக்குப் பஞ்சமே இல்லை. தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்தப் படகு இல்லம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.