நயன், த்ரிஷா மெளனம் ஏன்? மோகன்லால் பதவி விலக காரணமே இதுதான் - விசித்ரா பளீச்!
மோகன்லால் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய காரணம் குறித்து விசித்ரா பேசியுள்ளார்.
நடிகை விசித்ரா
கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பல சர்ச்சைகள் வெடித்துள்ளது. இதன் காரணமாக 'அம்மா' சங்கத் தலைவர் பதவியிலிருந்து மோகன்லால் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
தொடர்ந்து சங்க செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர். இதற்கிடையில், நிவின் பாலிக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நடிகை விசித்ரா,
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பொறுப்பிலிருந்தவர்கள் பல ஆண்டுகளாக மிக நெருக்கமாகப் பழகியவர்கள். அவர்களுக்குள் ஒரு நட்பு இருக்கும். ஒருவர் மீது குற்றச்சாட்டு எழும்போது எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் சங்க பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன்லால் பதவி விலகல்
யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. ஒருவரின் புகாரை மறைக்கவும் கூடாது. நடுநிலைமை என்பது முக்கியம். அப்படிப் பார்த்தால் மோகன்லால் சீனியர் நடிகர். அவரைப் பலருக்கும் தெரியும். அதை வைத்து யாராவது இந்த விசயத்தில் அவரிடம் உதவி கேட்கலாம். அவர் யாரையும் காப்பாற்ற முடியாது.
ஒரு தர்மசங்கடமான நிலை உருவாகலாம். அதை உணர்ந்துதான் மோகன்லால் பதவி விலகி இருக்கிறார். பெரிய நடிகைகள் பிசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் பிரச்சினை இல்லை. அப்படி இருக்கும் போது இதைப் பேசப் போக அது ஏதேனும் சர்ச்சையை உருவாக்கலாம்.
ஒட்டுமொத்த கவனமும் அந்தப் பக்கம் போகலாம். அதனால் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி மறுப்பு சொல்ல வேண்டி வரும். அது வளர்ந்து கொண்டே கூடப் போகலாம். அது நடிப்பதற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும். இதை எல்லாம் உணர்ந்துதான் தவிர்க்கிறார்கள். அது புரிந்துகொள்ளக் கூடியதுதான் எனத் தெரிவித்துள்ளார்.