ஷூட்டிங்கில் இயக்குநர் பாலா செய்த மோசமான வேலை - கொந்தளித்த பிரபல நடிகை!

Tamil Cinema Kerala
By Sumathi Sep 03, 2024 09:00 AM GMT
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை காஜல் பசுபதி பேசியுள்ளார்.

ஹேமா கமிஷன் அறிக்கை

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பல சர்ச்சைகள் வெடித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நடிகை காஜல் பசுபதி, சினிமா கனவோடு வரும் பெண்கள் வேறு வழியில்லை என்பதற்காக இந்த அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கொள்கிறார்கள் சிலர்,

actress kaajal pasupathi

என்னிடம் திறமை இருக்கு நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யமாட்டேன் என்று வாய்ப்பு வரும் வரை காத்திருப்பவர்களும் உண்டு. அதுவும் வெள்ளையாக இருந்துவிட்டால், தேடி தேடி வாய்ப்புகள் வரும். நான் கருப்பு, அதுவும் இல்லாமல் ரூடா கேள்வி கேட்பேன் என்பதால் எனக்கு படவாய்ப்பு வருவதில்லை.

நாம் திரையில் பார்த்து பிரம்மித்துப்போன ஒரு இயக்குநரின் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக சென்று இருந்தேன். அப்போது அவர், கையை பிடித்து குலுக்கி, விரலால் சுரண்டி அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகேவா என்று சிக்னல் கொடுத்தார். அது எனக்கு புரிந்துவிட்டது, இருந்தாலும் எதுவும் பேசவில்லை.

அம்மாவா நடிக்க கூட அட்ஜெஸ்ட்மெண்ட் தான்; அவ்வளவு வசதி - நடிகை மாலதி பகீர்!

அம்மாவா நடிக்க கூட அட்ஜெஸ்ட்மெண்ட் தான்; அவ்வளவு வசதி - நடிகை மாலதி பகீர்!


விளாசிய காஜல்

இந்த பத்துநாள் ஷூட்டிங்கும் போய்விடும் என்று அமைதியாக இருந்துவிட்டேன். இப்படி பெரிய இயக்குநர்களே சில நேரம் அசிங்கமாக நடந்துக் கொள்வார்கள். பரதேசி படப்பிடிப்பின் போது அந்த தேயிலை தோட்டத்தில் வேதிகாவை அடிப்பது போல ஒரு காட்சி வரும்.

ஷூட்டிங்கில் இயக்குநர் பாலா செய்த மோசமான வேலை - கொந்தளித்த பிரபல நடிகை! | Actress Kaajal Pasupathi About Adjustment

அந்த காட்சியில் நடித்து காட்டிய பாலா, வேதிகாவை அடிக்காமல் அங்கிருந்த ஒரு துணை நடிகையை அழைத்து கடுமையாக அடித்து காண்பித்தார். இதைப்பார்த்து எனக்கு ரொம்ப கோபம் வந்தது. அவர் தான் தைரியமான ஆளாச்சே, ஹீரோயினை அடிக்க வேண்டியதுதானே.. அவரால், ஹீரோயினை அடிக்க முடியாதா?

அந்த துணை நடிகைக்கு நடந்தது எனக்கு நடந்து இருந்தால் நான் நிச்சயம் கேட்டு இருப்பேன். ஆனால், அப்போது அதைப்பார்த்துவிட்டு அமைதியாக இருந்தேன். பெண்கள் எல்லா இடத்தில் தைரியமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக கராத்தே கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.