எனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்தது; அந்த ஹீரோதான்.. கஸ்தூரி பகீர்!

Kasthuri Tamil Cinema
By Sumathi Aug 31, 2024 09:45 AM GMT
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து கஸ்தூரி பேசியுள்ளார்.

நடிகை கஸ்தூரி

மலையாள சினிமா உலகில் பெண் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள், அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் போன்றவை பற்றி நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட்டது. தொடர்ந்து பெரும் சர்ச்சைகள் வெடித்து வருகிறது.

actress kasthuri

இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து பேசுகையில், எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள். எனக்கு தெரிந்து பல நடிகைகள் எந்த ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட்டும் செய்யாமல் பெரிய ஆளாக வந்திருக்கிறார்கள்.

5 நிமிஷ அட்ஜஸ்ட்மென்ட்'ல என்ன ஆகிட போகுது !! வெளிப்படையாக பேசிய நடிகை யாழினி

5 நிமிஷ அட்ஜஸ்ட்மென்ட்'ல என்ன ஆகிட போகுது !! வெளிப்படையாக பேசிய நடிகை யாழினி

அட்ஜஸ்ட்மென்ட்

இன்னும் ஒரு சில நடிகைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் உறுதியை நம்பி தங்களுடைய உடலை படுக்கைக்காக கொடுக்கிறார்கள். ஆனால் அதில் ஏமாந்து போய்விடுகிறார்கள். ஹீரோவுடன் ஒத்துப்போக முடியாது என்று நானே ஒரு படத்திலிருந்து விலகி விட்டேன்.

எனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்தது; அந்த ஹீரோதான்.. கஸ்தூரி பகீர்! | Kasthuri Interview About Adjustment Issue

அதுபோல இன்னொரு படத்தை முடித்துவிட்டு அந்த நடிகரோட நடிக்கவே மாட்டேன் என்றும் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன். இப்படி சினிமா உலகத்தில் வெளியே தெரியாத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இதே பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.