எதற்கு பிளாக் பண்ணீங்க?.. என்னை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை - சீமானை எதிர்க்கும் வெற்றிக்குமரன்!

Tamil nadu Seeman
By Vinothini Oct 01, 2023 05:33 AM GMT
Report

கட்சியிலிருந்து நீக்கியதால் சீமானை எதிர்த்து வெற்றிக்குமரன் பதிவிட்டுள்ளார்.

கட்சியில் நீக்கம்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வெற்றிக்குமரன், மதுரை மேற்கு தொகுதியை சேர்ந்த இவர் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி ஒழுங்கு நடவடிக்கையின் பரிந்துரையின் பேரில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

vetrikumaran-said-seeman-has-no-rights-to-remove

இதற்கு வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னை கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி விட்டதாக ஒரு கடிதத்தாள் சமூக வலைத்தளங்களில் கண்டேன். அது உண்மையா என தெரியவில்லை. உண்மை என்றால் என்ன காரணத்திற்காக என்னை நீக்கினீர்கள்? நான் செய்த தவறு என்ன?"

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன நீரை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன நீரை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!

வெற்றிகுமாரன்

இதனை தொடர்ந்து, "வெளிப்படையாக கூற முடியாத தவறு என்றாலும் என்னை ஏன் அழைத்து விசாரிக்கவில்லை? நான் தவறு செய்திருந்தால் கண்டிக்கவும், தண்டிக்கவும் உரிமை உள்ள நீங்கள் ஏன் கடந்த ஆறு மாத காலமாக என் அழைப்பை கூட ஏற்க மறுத்து தொடர்பை தடை செய்தீர்கள்? யாரோ ஒருவர் உங்களிடத்தில் என்னைப் பற்றி கூறியிருந்தாலும் எப்படி உங்களால் நம்ப முடிந்தது 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய, உறவாடிய என்னை ஏன் புரிந்து கொள்ளவில்லை?

தவறான ஒருவன் இத்தனை ஆண்டு காலத்தில் வெளிப்பட்டிருக்க மாட்டானா?. உங்களின் மீது இருந்த அதீத அக்கறையின் காரணமாக தற்பொழுது, உங்களின் தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் ஒருவனிடம் அவனை என் சொந்த தம்பியாக நினைத்து உங்களைப் பற்றி வருந்தி புலம்பி இருக்கிறேன்.

அதைத்தவிர வேற எந்த தவறும் செய்யவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின் படி என்னை நீக்குவதற்கு உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதையும் மாநில பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நான் நாம் தமிழராகவே தொடர்கிறேன்" என்று கூறியுள்ளார்.