என் முதுகில் குத்தி குத்தியே குத்த இடம் இல்லாமல் போச்சு - அந்த அளவுக்கு பண்ணிட்டாங்க - சசிகலா

tamilnadu-politics
By Nandhini Jun 16, 2021 06:28 AM GMT
Report

கடந்த சில நாட்களாக சசிகலா தொண்டர்களிடையேயும், முக்கிய பிரமுகர்களிடையேயும் பேசி வருவதாக ஆடியோக்கள் வெளிவந்தது. இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அனைத்து அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று சசிகலா பலருடன் இது குறித்து பேசியுள்ளார். அந்த ஆடியோக்களும் நேற்று வெளியானது.

தேனியை சேர்ந்த அந்த அதிமுக தொண்டர் சிவனேசன் சசிகலாவிடம் பேசியதாவது -

அந்த சமயத்தில் ஓபிஎஸ் போய்விட்டார்; அவர் இருந்திருந்தால் அவரைத்தான் நான் உட்கார வைத்திருப்பேன். எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்துதான் கட்சியை வழிநடத்த வேண்டும்.

அப்போதுதான் கட்சியை சிறந்த முறையில் கொண்டு போக முடியும். அதுவே இங்கு கிடையாது என்றால் எப்படி? இதை நினைத்துதான் தொண்டர்கள் என்னிடம் கவலை தெரிவிக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் தாயாக இருந்து என்ன சொல்ல முடியும்? நான் அவர்களைக் கட்டுப்படுத்தி வருகிறேன். தொண்டர்கள் யார் போன் செய்தாலும் என்னிடம் வருத்தப்பட்டு பேசுகிறார்கள்.

தொண்டர்கள் இப்படி மனக்குமுறலோடு இருக்கும்போது அதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும். அதனால்தான் சந்திக்க வருகிறேன் என்று கூறினேன். அதற்காக அவர்களை கட்சியிலிருந்து நீக்கியதால், எல்லோரும் இது குறித்தே பேசுகிறார்கள்.

இதுதான் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு கிடைத்த பரிசா? என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை. அந்த அளவுக்கு செய்து விட்டார்கள். இப்போது தொண்டர்களையும் செய்யும்போது எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?. கஷ்டப்பட்ட காலத்தில் கட்சியை நிமிர்த்திக் கொண்டு வர ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்.

என் முதுகில் குத்தி குத்தியே குத்த இடம் இல்லாமல் போச்சு - அந்த அளவுக்கு பண்ணிட்டாங்க - சசிகலா | Tamilnadu Politics

அவருடன் நானும் எவ்வளவு பாடு பட்டேன் என்பதும் எல்லோருக்கும் தெரியும். இப்போது எப்படி என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம். அந்த தொண்டர்களோடு கடைசி வரைக்கும் இருந்து விட்டு போகிறேன்.

இப்போது கட்சியை காப்பாற்ற நான் உறுதியாக வருவேன். எனக்கு அடிமட்ட தொண்டர்கள் தான் முக்கியம் . அதற்கான நேரம் வந்துவிட்டது. நிச்சயம் நல்லது நடக்கும் கவலைப்பட வேண்டாம் என்று பேசியுள்ளார்.