பூமியை போன்ற மற்றொரு கிரகம்; முற்றிலுமாக ஆவியான தண்ணீர் - எப்படி தெரியுமா?
வெள்ளி கோளில் தண்ணீர் இருந்ததாகவும், நாளடைவில் அது ஆவி ஆகிவிட்டதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி கிரகம்
உலகின் பல நாடுகள் பூமியை தவிர்த்து மற்ற கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றன. இதற்காக நிலவு மற்றும் செவ்வாய் கோளில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளி கோளில் தண்ணீர் இருந்ததாகவும், நாளடைவில் அது ஆவி ஆகிவிட்டதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளி கிரகம் உருவானபோது, தண்ணீர் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
பசுமை இல்ல விளைவு
பின்னர் சூரிய மண்டலத்தில் பசுமை இல்ல விளைவை (Green House) அந்த கிரகம் எதிர்கொண்டுள்ளது. இதனால் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் 900 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அதிலிருந்து தண்ணீர் முழுவதும் ஆவியாகியுள்ளது. இதேபோல் மற்ற கிரகங்களில் தண்ணீர் இருந்ததா? அப்படி இருந்திருந்தால் எப்படி ஆவியானது? என்பது குறித்தது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது