சூரியனில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - படம்பிடித்து அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்!

India Indian Space Research Organisation ISRO Aditya-L1
By Jiyath May 15, 2024 05:40 AM GMT
Report

சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா எல்-1 விண்கலம் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. 

ஆதித்யா எல்-1

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்தது.

சூரியனில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - படம்பிடித்து அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்! | Aditya L 1 Collects Data On Solar Magnetic Storm

இதனையடுத்து சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலத்தைஇஸ்ரோ கடந்த ஆண்டு விண்ணில் ஏவியது. இந்த விண்கலமானது பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தூரம் 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது.

கிழக்கு நோக்கி நகரும் பூமி; நெருங்கி வரும் பேராபத்து - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

கிழக்கு நோக்கி நகரும் பூமி; நெருங்கி வரும் பேராபத்து - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

சூரியகாந்த புயல் 

இந்நிலையில் கடந்த 10 மற்றும் 12-ம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை, ஆதித்யா எல்-1 விண்கலம் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இதுவே கடந்த 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - படம்பிடித்து அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்! | Aditya L 1 Collects Data On Solar Magnetic Storm

மேலும், இதன் காரணமாக ஏற்படும் காந்த விசை புயல் இந்திய செயற்கைக்கோள்களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.