எந்த நாயும் குரைச்சிட்டு போகட்டும்; கொதித்த வெங்கடேஷ் பட் - யாரை சொல்றாரு தெரியுமா?

Venkatesh Bhat Bayilvan Ranganathan
By Sumathi Oct 07, 2024 05:00 AM GMT
Report

பயில்வான் ரங்கநாதன் விமர்சனத்திற்கு வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்துள்ளார்.

பயில்வான் பயில்வான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார் வெங்கடேஷ் பட். ஆனால் அதன் 5வது சீசனிலிருந்து வெளியேறினார்.

venkatesh bhatt

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் தற்போது கலந்துக்கொண்டு வருகிறார். தொடர்ந்து, இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், வெங்கடேஷ் பட் விஜய் டிவியிடம் எக்கச்சக்கமாக சம்பளம் கேட்டிருக்கிறார்.

அதற்கு சேனல் நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் வெளியேறினார் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள பட், பயில்வான் ரங்கநாதன் என்கிற யாரோ ஒருவர் என்னைப் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

மகன் ரொம்ப கோபப்படுவான்; மருமகள் இப்படித்தான் - ஜெயம் ரவியின் அம்மா பேட்டி!

மகன் ரொம்ப கோபப்படுவான்; மருமகள் இப்படித்தான் - ஜெயம் ரவியின் அம்மா பேட்டி!


வெங்கடேஷ் பட் பதிலடி 

அந்த வீடியோவுக்கு கீழே அவரை திட்டி பலர் கமெண்ட்ஸ்களை போட்டுவருகிறார்கள். என்னுடைய ரசிகர்கள், என் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பணத்துக்காகவா இல்லை மனநிலை சரியில்லாமல் இதுபோன்று செய்கிறாரா என தெரியவில்லை.

எந்த நாயும் குரைச்சிட்டு போகட்டும்; கொதித்த வெங்கடேஷ் பட் - யாரை சொல்றாரு தெரியுமா? | Venkatesh Bhatt Slams Bayilvan Ranganathan

ஏதோ பிழைப்புக்காக சொல்கிறார். அவர் அவரது வேலையை செய்யட்டும். அந்த சாணியில் கல் எறிய வேண்டாம். இதுபோன்று வரும் செய்திகளுக்கு ரியாக்ட் செய்யக்கூடாது. நாம் சூரியனாக இருப்போம் நம்மை பார்த்து எந்த நாய் வேண்டுமென்றாலும் குரைக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.