மீண்டும் திருமணம்? உறுதிப்படுத்திய நடிகை வனிதா - வீடியோ வைரல்!

Viral Video Vanitha Vijaykumar
By Sumathi Oct 05, 2024 09:00 AM GMT
Report

திருமண வதந்திக்கு நடிகை வனிதா பதில் கொடுத்துள்ளார்.

திருமண வதந்தி

நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

robert - vanitha

அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பின், அநீதி படத்தில் நடித்தார். தொடர்ந்து, பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்.

விஜய் டிவியிலிருந்து விலகிய அறந்தாங்கி நிஷா - அவரே போட்ட பதிவு!

விஜய் டிவியிலிருந்து விலகிய அறந்தாங்கி நிஷா - அவரே போட்ட பதிவு!

வனிதா பதில்

இதற்கிடையில், முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் அதிலிருந்து வெளியே வந்தார். அவர் அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். அண்மையில், ராபர்ட் மாஸ்டருடன் வனிதா இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வைரலாகி இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது.

இந்நிலையில், அது திருமணம் இல்லை… படத்தின் ப்ரோமோஷன் என்பதை வனிதா வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். வனிதா இயக்கி இருக்கும் படம் MR & MRS. இதில் வனிதா மற்றும் ராபர்ட் இணைந்து நடித்துள்ளனர்.