விஜய்க்கு நோ சொன்ன ஐஸ்வர்யா ராய் - சொன்ன அந்த காரணம் இருக்கே..
ஐஸ்வர்யா ராய், விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய்
இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
விஜய்க்கு மறுப்பு
இந்நிலையில், முன்னதாக விஜய் நடிப்பில் உருவான தமிழன் படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம், ஆனால் விஜயுடன் ஜோடியாக நடிக்க அவர் மறுத்துவிட்டாராம்.
விஜயுடன் நான் நடிக்கமாட்டேன், அவர் என்னை விட வயதில் சிறியவர். அதனால் எங்கள் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்காது என்று கூறியுள்ளார்.
அதன்பின் தான் 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
