ஐஸ்வர்யா ராய் அப்படி இல்லை; நான் மட்டும் ஏன் அப்படி இருக்கணும் - மாமியார் உடைத்த சீக்ரெட்!
ஐஸ்வர்யா ராய் உடனான உறவு குறித்து அவரது மாமியார் தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்
இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து சமீப காலமாக ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை பிரிந்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இதனையடுத்து அண்மையில், அபிஷேக் பச்சன் அளித்த பேட்டி ஒன்றில் நாங்கள் பிரபலமாக இருப்பதால் துரதிர்ஷ்டவசமாக எங்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
மாமியார் தகவல்
எங்களை பற்றி கதையும் கட்டுகிறார்கள். நாங்கள் பிரியவெல்லாம் இல்லை என்றுக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜெயா பச்சன், "மகளுக்கும் மருமகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு மகள் தனது பெற்றோரை ரொம்பவே சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஒரு மருமகள் தனது மாமியார், மாமனாரை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. ஐஸ்வர்யா ராய் எனது மகள் இல்லை மருமகள்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி இருக்கும்போது நான் அவரிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும். அவரது அம்மா வேண்டுமானால் அப்படி இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் நான் அப்படி இருந்ததில்லை" எனத் தெரிவித்துள்ளார்.