ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!
ஹனுமூனுக்கு செல்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்துள்ளார்.
ஜஸ்வர்யா ராய்
இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்,
கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமதி. பச்சன்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் ஹனிமூன் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருமணம் முடிந்த பின் அளித்திருந்த பேட்டி ஒன்றில், ஹனிமூனுக்கு நானும் அபிஷேக்கும் போராவிற்கு விமானத்தில் சென்றோம். அப்போது விமான பணிப்பெண் ஒருவர் என்னை திருமதி. பச்சன் என அழைத்தார்.
அப்போது நானும் அபிஷேக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம். அப்போது தான் எனக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை உணர்ந்தேன். நான் திருமதி பச்சன் ஆகிவிட்டேன் என்பதும் நினைவுக்கு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.