ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து; முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

Aishwarya Rai Viral Video Abhishek Bachchan
By Sumathi Dec 07, 2023 06:49 AM GMT
Report

 ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து தகவல் தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

 ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

aishwarya-rai with family

இந்நிலையில் அபிஷேக் பச்சன் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் கையில் திருமண மோதிரம் இல்லை. இந்த புகைப்படம் வைரலாகியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகின்றனரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கணவருடன் உறவில் அந்த நேரத்தில் அதுதான் பிடிக்கும் - ஓப்பனா பேசிய ஐஸ்வர்யா ராய்!

கணவருடன் உறவில் அந்த நேரத்தில் அதுதான் பிடிக்கும் - ஓப்பனா பேசிய ஐஸ்வர்யா ராய்!

விவாகரத்து? 

தற்போது, 16 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இவர்களது விவாகரத்து வதந்தி தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குடும்பத்துடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.

அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் 'த ஆர்ச்சிஸ்' படத்தின் பிரிமியர் ஷோவில்தான் ஒன்றாக கலந்து கொண்டனர். இதன்மூலம் இருவரும் ஒன்றாகத்தான் இருப்பதாக தெரியவருகிறது.