48 வயதில் மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்? பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டிற்கு வராததற்கு காரணம் இதுதானா!

Aishwarya Rai Pregnancy Ponniyin Selvan: I Gossip Today
By Sumathi 6 மாதங்கள் முன்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், தற்போது அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஜஸ்வர்யா ராய்

இந்நிய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

48 வயதில் மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்? பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டிற்கு வராததற்கு காரணம் இதுதானா! | Aishwarya Rai Pregnancy Rumours

இத்தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

பொன்னியின் செல்வன் 

மேலும் இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

48 வயதில் மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்? பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டிற்கு வராததற்கு காரணம் இதுதானா! | Aishwarya Rai Pregnancy Rumours

அத்தோடு இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.

மீண்டும் கர்ப்பம்?

இதற்கு காரணம் அவரது சமீபத்திய புகைப்படங்கள் தான். சமீபத்தில் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா உடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர்கோட் ஒன்றையும் அணிந்து இருக்கிறார்.

மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதை மறைப்பதற்காகவே அந்த ஓவர்கோட்டை போட்டிருந்ததாக கூறி பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழாவிலும் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை.

அத்தோடு அவர் கர்ப்பமாக இருப்பதனால் தான் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் பரவி வருகின்றன.