மகன் ரொம்ப கோபப்படுவான்; மருமகள் இப்படித்தான் - ஜெயம் ரவியின் அம்மா பேட்டி!

Jayam Ravi Tamil Cinema Aarti Ravi
By Sumathi Oct 05, 2024 06:00 PM GMT
Report

ஜெயம் ரவியின் அம்மா அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி-ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

jayam ravi - aarti

இந்நிலையில், மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என தற்போது ஆர்த்தி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதாக செய்திகள் பரவியது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி தனது நண்பர் அவ்வளவு தான். விவாகரத்துக்கு தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் பொய் என கெனிஷா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எனக்கு ஜெயம் ரவியுடன் உறவு இருக்கு; ஆனால்.. உண்மை உடைத்த கெனிஷா!

எனக்கு ஜெயம் ரவியுடன் உறவு இருக்கு; ஆனால்.. உண்மை உடைத்த கெனிஷா!

அம்மா பேட்டி 

இந்நிலையில், ஜெயம் ரவியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இரண்டு மகன்களும் மருமகள்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இரண்டு மருமகள்களில் யாரை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே திறமையானவர்கள் தான்.

jayam ravi mother

என்னுடைய மூத்த மருமகள் ரொம்பவும் பாசமானவர். அதுபோல இரண்டாவது மருமகள் ஆர்த்தியும் வெளிநாட்டில் படித்திருக்கிறார். என்னுடைய மகன்களில் மூத்த மகன் ராஜா இயக்குனராக இருக்கிறார். இரண்டாவது மகன் ஜெயம் ரவி ரொம்பவும் ஒர்க்அவுட் பண்ணவான்.

அதனால் அவர்களை பார்க்கும்போது என்னடா இளைச்சு போயிட்ட என்று கேட்டால் என்னுடைய இரண்டாவது மகன் ஜெயம் ரவி ரொம்பவே கோபப்படுவான். என்னுடைய மகன்கள் எப்போதும் வெளியே போகும்போது எங்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு தான் வெளியே போவாங்க. எந்த இடத்திலும் எங்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று ரொம்பவும் யோசிப்பாங்க என எமோஷனலாக பேசியுள்ளார்.