வேங்கைவயல்: 31 பேரின் டிஎன்ஏ டெஸ்ட் தோல்வி; அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டிஎன்ஏ ஒத்துப்போகவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வேங்கைவயல் விவகாரம்
புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் இருந்து பட்டியல் இன மக்களுக்கு பெரிய மேல்நிலைத் தொட்டி ஒன்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
கடந்து ஆண்டு டி.26 ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தொட்டியில் மனித கழிவு கலந்து இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனுர் போலீசார் வழக்குப்பதிவு செய்தது.
டிஎன்ஏ டெஸ்ட் தோல்வி
மேலும் 75 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வேங்கைவயல், இறையூர், கீழமுத்துக்காடு, காவேரி நகர் ஆகிய கிரமங்களைச் சேர்ந்த 221 பேரிடம் விசாரணை நடத்தியது.
நேரடி ஆதாரம் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமாண ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், டிஎன்ஏ பரிசேதனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 5 சிறுவர்கள் உட்பட 31 நபர்களுக்கு 4 கட்டங்களாக டிஎன்ஏ பரிசேதணை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் இருந்து முடிவுகள் வெளி வந்த நிலையில் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரும், 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப் போகாத நிலையில் சிபிசிஐடி -க்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால், குற்றவாளிகளை கண்டறிவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.