வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டுமாதம்தான் டைம் : அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்

Madras High Court
By Irumporai Mar 29, 2023 09:52 AM GMT
Report

வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக தனிநபர் ஆணையம் அமைக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கை வயல் சம்பவம்

கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் எனும் ஊரில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் காவல்துறை வழக்குப்பதிவு செய்த விசாரித்த நிலையில் தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டுமாதம்தான் டைம் : அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம் | Madras High Court Has Ordered Vengai Field

தனிநபர் ஆணையம்

 இந்த நிலையில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக , ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து, 2 மாதங்களுக்குள் அந்த ஆணையம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.