95 வருஷமா.. ஒரு குழந்தை கூட பிறக்கல; அப்படி ஒரு நாடு இருக்கு தெரியுமா?
95 வருடங்களை கடந்தும் இதுவரை ஒரு குழந்தைகூட பிறக்காத நாடு குறித்து பார்க்கலாம்..
குழந்தை பிறப்பு
உலகின் மிகச் சிறிய நாடு வாடிகன். இங்கு பலமுறை மருத்துவமனை கோரப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாலோ, அவர் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்.
இதன் பரப்பளவு 118 ஏக்கர் மட்டும்தான். இங்கு பிரசவ அறை இல்லாததால் இங்கு யாரும் பிரசவம் செய்ய முடியாது. அதனால் வெளியே சென்றுவிடுகின்றனர். இயற்கையான குழந்தைப் பிரசவம் நடக்கவில்லை.
நிரந்தர குடியுரிமை
அதற்கு அனுமதிக்கப்படவும் இல்லை. இதற்கு சட்டரீதியான காரணமாக, இங்கு யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை, இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள், அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள்.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறக்கூடிய பிறப்பே இங்கு இல்லை. இங்குள்ள பெண் எப்போது கர்ப்பமாகி, பிரசவ நேரம் நெருங்குகிறதோ, அப்போது இங்குள்ள விதிகளின்படி,
குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவர் இங்கிருந்து செல்ல வேண்டும். அதன்படி, 95 ஆண்டுகளில் வாடிகன் நகரில் ஒரு குழந்தை கூட பிறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது