கல்லறைக்கான இடம் பார்த்துட்டேன்; ஆனால், அது வாடிகன் இல்ல - போப் சொன்னதை கவனிச்சீங்களா!

Pope Francis Vatican
By Sumathi Dec 14, 2023 07:46 AM GMT
Report

போப் கல்லறைக்கான இடத்தை தேர்வு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ்(87) பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

pope francis

அதில், சான்டா மரியா மேகியார் (santa maria maggiore) பசிலிக்காவில் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். இந்த தேவாலயத்துக்கும் தனக்கும் இடையே நெருங்கி தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். போப் பதவியில் அமர்வதற்கு முன்னர் ரோம் நகருக்கு செல்கிற போதெல்லாம்,

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு தேவாலய கதவு திறந்திருக்கும் - சொன்னது போப் பிரான்சிஸ்!

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு தேவாலய கதவு திறந்திருக்கும் - சொன்னது போப் பிரான்சிஸ்!

கல்லறை விருப்பம்

வார இறுதி நாட்களில் சான்டா மரியா மேகியோர் தேவாலயத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். 2013இல் இவர் போப் பதவியை அடைந்த பின்னரும் இந்த தேவாலயத்துக்கு சென்று வழிபட்டுள்ளேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் அங்கு சென்றுதான் வழிப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கல்லறைக்கான இடம் பார்த்துட்டேன்; ஆனால், அது வாடிகன் இல்ல - போப் சொன்னதை கவனிச்சீங்களா! | Pope Francis About His Graveyard And Rome

இவரது அறிவிப்பு பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, நூற்றாண்டுகளுக்குப் பின் வத்திக்கான் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப்பாண்டவர் இவர் தான். இதற்கிடையில், போப் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலேயே கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.