வலியால் துடித்த போப் பிரான்சிஸ் - அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

Pope Francis Italy
By Sumathi Jun 08, 2023 06:31 AM GMT
Report

குடல் அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் 

இத்தாலியின் வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ்(86) வசித்து வருகிறார். கத்தோலிக்க மதத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் டிக்கடி அவர் உடல் நல பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார். 2021ல் குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டது.

வலியால் துடித்த போப் பிரான்சிஸ் - அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி | Pope Francis In Hospital Abdominal Laparotomy

இதையடுத்து அவர் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு பின் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை

சமீபகாலமாக வயிற்றில் அடிக்கடி தாங்க முடியாத வலி ஏற்பட்டு வந்துள்ளது. அங்கு 3 மணிநேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து, சில நாட்கள் ஓய்வில் இருக்கவுள்ளார். இதுபற்றி ஹோலி சீ பிரஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

வலியால் துடித்த போப் பிரான்சிஸ் - அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி | Pope Francis In Hospital Abdominal Laparotomy

‛‛போப் ஆண்டவருக்கு குடல் சார்ந்த அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான். வயிற்று பகுதியில் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியமானதாக இருந்தது.

சிறிது கால ஓய்வுக்கு பிறகு போப் பிரான்சிஸ் வழக்கமான பணிக்கு திரும்புவார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.