இன்னும் எவ்வளவு ரத்தம் ஓட வேண்டும் - போப் பிரான்சிஸ் ஆதங்கம்!

Russo-Ukrainian War Pope Francis Ukraine Russian Federation
By Sumathi Oct 03, 2022 12:24 PM GMT
Report

இன்னும் எவ்வளவு ரத்தம் ஓட வேண்டும் என போப் பிரான்சிஸ் அழுத்தமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷ்யா- உக்ரைன்

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கி 8 மாதங்கள் ஆன பின்னும் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளின் போரானது அந்த பிராந்தியத்தை மட்டுமல்லாது உலக நாடுகளில் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் எவ்வளவு ரத்தம் ஓட வேண்டும் - போப் பிரான்சிஸ் ஆதங்கம்! | Pope Francis Urges Russia To Immediately Stop War

இதனால், உயிர் சேதமும் பொருள் சேதமும் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும்படி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், வாடிகனில் உரை நிகழ்த்திய போப் பிரான்சிஸ்,

போப் பிரான்சிஸ்

‘ எனது வேண்டுகோள் முதலில் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவருக்கு உரையாற்றப்படுகிறது. இந்த வன்முறை மற்றும் மரணத்தின் சுழலை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் அவரது சொந்த மக்களுக்காகவும்.

இன்னும் எவ்வளவு ரத்தம் ஓட வேண்டும் - போப் பிரான்சிஸ் ஆதங்கம்! | Pope Francis Urges Russia To Immediately Stop War

மறுபுறம், ஆக்கிரமிப்புகளின் விளைவாக உக்ரேனிய மக்கள் படும் பெரும் துன்பங்களைக் கண்டு வருத்தமடைந்த நான், அமைதிக்கான முன்மொழிவுகள் தொடர்பாக உக்ரைன் அதிபருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த மாதங்களில் சிந்திய இரத்தம் மற்றும் கண்ணீர் ஆறுகளால் நான் வருத்தப்படுகிறேன். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக குழந்தைகள், மற்றும் பல மக்களையும் குடும்பங்களையும் வீடற்றவர்களாக ஆக்கிய அழிவால் நான் வருத்தமடைகிறேன்’ என்றுதெரிவித்துள்ளார்.