இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்

Pope Francis
By Irumporai Jul 26, 2022 07:18 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ், கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த கலாச்சார அழிவுகள் மற்றும் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார்.

பிரிக்கப்பட்ட குழந்தைகள்

போப் பிரான்சிஸ். கடந்த பல நூற்றாண்டுகளாக மதங்களின் பெயரால் உலகெங்கும் நிகழ்ந்த அட்டூழியங்களை அடையாளப்படுத்தி, அவற்றை ஏற்றுக் கொண்டு வரலாற்றின் அங்கமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை போப் பிரான்சிஸ் உணர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் , கனடாவின் ஆதிகுடிகளை மெட்டீஸ், இன்னுயிட் என்று அழைக்கிறார்கள். இந்த ஆதிக்குடி மக்களின் பிள்ளைகளை அரசாங்கம் வலுக்கட்டாயமாக பெற்றோர்களிடம் இருந்து பிரித்து அங்கே இருந்த கத்தோலிக்க பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது.

பல சிறார்கள் இறந்து போனார்கள்

1881 மற்றும் 1996 க்கு இடையில் 150,000 பழங்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு குடியிருப்புப் பள்ளிகளுக்குக் கொண்டு வரப்பட்டனர். கேட்க ஆளில்லாத அந்தப் பிள்ளைகள், பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானர்கள்.

இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ் | Pope Francis Apology For Evil Christians Against

இந்தக் கொடுமைகளினால் பல சிறார்கள் இறந்தும் போனார்கள். 2021 முதல் இந்தப் பள்ளிகளின் வளாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உடல்களை தோண்டி எடுத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் கல்லறைகள், முன்னாள் குடியிருப்பு பள்ளிகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது மிகப்பெரிய விவாதங்களை எழுப்பியது.

மன்னிப்பு கேட்ட போப்

மரணதண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரும் நீதிமன்றம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் பாலியல் துஷ்பிரயோகம், பட்டினி மற்றும் அடிக்கப்பட்ட குழந்தைகளை "கலாச்சார இனப்படுகொலையின் ஒரு பகுதியாக" அழைத்தது.

மேலும் தேவாலயங்களின் தலைமைப் பதவிகளில் பெண்கள் இல்லை என்பதும் தற்போது விவாதப்பொருளாகிவருகிறது. ஆதிக்குடிகளின் தலைவர்கள் வாடிகன் பயணித்து போப்பை சந்தித்தனர். அப்போது, கலச்சார அழிவுக்கு திருச்சபை ஒத்துழைத்ததற்கான விஷயத்தில் போப் அவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

"கலாச்சார அழிவு" என்று இந்த கொடுமைகளை விவரித்த போப், இதற்கு தேவாலயங்களின் ஒத்துழைப்பைப் பற்றி வருத்தம் தெரிவித்திருந்தார். 'கலாச்சார அழிவுக்கு' திருச்சபையின் ஒத்துழைப்பு குறித்து 85 வயதான போப்பாண்டவர் வருத்தம் தெரிவித்தார்.