வாடகைத்தாய் முறை இழிவு; தடை விதிக்கணும் - போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்
வாடகைத் தாய் முறைக்குத் தடை விதிக்க போப் பிரான்சிஸ் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார்.
வாடகைத் தாய்
சமீப காலத்தில் வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக்கொள்வது உலக அளவில் அதிகரித்துள்ளது. வாடகைத் தாய் முறை என்பது ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையைப் பயன்படுத்தி குழந்தை பெற்றுத்தருவது.
உடல்ரீதியாக குழந்தைப் பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ்(87),
போப் எதிர்ப்பு
வாடகைத்தாய் என்பது இழிவான முறை. பெண் மற்றும் அந்தக் குழந்தையின் கண்ணியத்தின் மீதான வன்முறை இது. குழந்தை என்பது ஒரு பரிசு. வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியாது. வாடகைத்தாய் முறைக்கு சர்வதேச அளவில் தடை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ‘கருப்பையை வாடகைக்கு விடும்’ நிகழ்வு எனக் குறிப்பிட்டு வாடகைத்தாய் முறைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.