செகண்ட் ஹேண்ட் தான்.. வாங்க மாட்டிங்களா; அப்பாவே அப்படிதான் - நடிகை வரலக்ஷ்மி பளீச்!

S Varalakshmi Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Apr 29, 2024 03:45 PM GMT
Report

தனது திருமணம் குறித்த நெகட்டிவ் கமெண்டுகளுக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

வரலக்ஷ்மி சரத்குமார்

போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அதகளம் செய்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், கடைசியாக மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார்.

செகண்ட் ஹேண்ட் தான்.. வாங்க மாட்டிங்களா; அப்பாவே அப்படிதான் - நடிகை வரலக்ஷ்மி பளீச்! | Varalaxmi Sarathkumar Reacts To Negative Comments

தற்போது 38 வயதாகும் வரலக்ஷ்மி, நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி, 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வரலக்ஷ்மி "நிக்கியின் முந்தைய திருமண வாழ்க்கையில் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே செட்டாகவில்லை. இதனையடுத்து அவர்கள் பிரிந்து விட்டார்கள். அவர்களை நான் சென்று பிரிக்கவில்லை.

ஏணி தான் வைக்கணும்.. நடிகையின் போட்டுவுக்கு கமெண்ட் செய்த தந்தை, சகோதரி!

ஏணி தான் வைக்கணும்.. நடிகையின் போட்டுவுக்கு கமெண்ட் செய்த தந்தை, சகோதரி!

எங்களுக்கு பிடித்தது

அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அதன்பிறகு நாங்கள் சந்தித்தோம்.. பேசினோம். எங்களுக்கு பிடித்தது. இப்போது கல்யாணம் செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம். எ

செகண்ட் ஹேண்ட் தான்.. வாங்க மாட்டிங்களா; அப்பாவே அப்படிதான் - நடிகை வரலக்ஷ்மி பளீச்! | Varalaxmi Sarathkumar Reacts To Negative Comments

ன்னுடைய அப்பாவே இரண்டாவது திருமணம் செய்தவர்தானே.  இதில் ஒன்றும் தப்பில்லை. விவாகரத்து என்பது முத்திரையல்ல. இரண்டு பேர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இடையில் ஒத்துவரவில்லை. பிரிந்து செல்கிறார்கள் அவ்வளவுதான் அதில் இருப்பது.

நீங்கள் ஒருவர் பயன்படுத்திய வாகனத்தை மீண்டும் வாங்க மாட்டீர்களா என்ன? உங்கள் மனதுக்கு அது பிடித்திருந்தால் நீங்கள் தாராளமாக அதை வாங்கி பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.