அப்போ தெரியல.. இந்த வாழ்க்கையால எல்லாம் போச்சு - வரலக்ஷ்மி வேதனை!

S Varalakshmi Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Mar 20, 2024 01:00 PM GMT
Report

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசியுள்ளார். 

வரலக்ஷ்மி சரத்குமார்

போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அதகளம் செய்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், கடைசியாக மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார்.

அப்போ தெரியல.. இந்த வாழ்க்கையால எல்லாம் போச்சு - வரலக்ஷ்மி வேதனை! | Aralaxmi Sarathkumar About Her Personal Life

அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது 38 வயதாகும் வரலக்ஷ்மி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தேர்தல் சமயம் அதுக்கு கூட பயம்.. சாகுறவர ஜெயில்ல போடணும் - ரஜினிகாந்த் ஆவேசம்!

தேர்தல் சமயம் அதுக்கு கூட பயம்.. சாகுறவர ஜெயில்ல போடணும் - ரஜினிகாந்த் ஆவேசம்!

பெரிய தவறு

வரலக்ஷ்மி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "போடா போடி படத்துக்கு பிறகு சினிமாவில் நான் கவனம் செலுத்தாமல் பெர்சனல் வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். அதுதான் எனது சினிமா கரியரில் நான் செய்த பெரிய தவறு.

அப்போ தெரியல.. இந்த வாழ்க்கையால எல்லாம் போச்சு - வரலக்ஷ்மி வேதனை! | Aralaxmi Sarathkumar About Her Personal Life

அந்த வயதில் நாம் செய்வது தவறு என்றும் தெரியவில்லை. என்னுடைய கவனம் அப்போதே சரியாக மட்டும் இருந்திருந்தால் நிறைய படங்களில் நடித்திருந்திருப்பேன். சினிமா வாய்ப்புகள் எனக்கு வராதபோது, நான் அழகா இல்லையா,

நன்றாக நடனம் ஆடவில்லையா, நன்றாக தமிழ் பேசவில்லையா என பல கேள்விகளை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். அதையே நினைத்து கவலைப்படுவேன். ஆனால் அந்த சறுக்கல்கள்தான் என்னை பலப்படுத்தின" என்றார்.