தேர்தல் சமயம் அதுக்கு கூட பயம்.. சாகுறவர ஜெயில்ல போடணும் - ரஜினிகாந்த் ஆவேசம்!
மருந்தில் கலப்படம் செய்பவர்களை சாகும் வரை ஜெயிலில் போடவேண்டும் என்று நடிகர் நடஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை வடபழனியிலுள்ள ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

பின்னர் மேடையில் உரையாற்றிய அவர் "கொஞ்சம் மீடியா ஆட்கள் வருவாங்க. பேசுங்க'னு என்கிட்ட சொன்னாங்க. இங்க வந்து இத்தனை கேமராவை பார்த்ததும் எனக்கு பயம் வந்துடுச்சு. தேர்தல் சமயம் வேற இது.
ஆவேசம்
மூச்சு விடக்கூட பயமாக இருக்கு. எனக்கு மருத்துவர்கள் மேலயும், செவிலியர்கள் மேலேயும் நல்ல மரியாதை இருக்கு. அவங்களோட உதவியாலயும் முன்னணி தொழில்நுட்ப வசதிகளாலயும்தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்.

இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.
சிறையில் இம்ரான் கான் மரணம் - வெடித்த சர்ச்சை...! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர் IBC Tamil
யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் IBC Tamil