ஏணி தான் வைக்கணும்.. நடிகையின் போட்டுவுக்கு கமெண்ட் செய்த தந்தை, சகோதரி!
நடிகை குஷி கபூரின் போட்டோஷூட் புகைப்படத்திற்கு அவரது சகோதரி மற்றும் தந்தை ஆகியோர் கமெண்ட் செய்துள்ளனர்.
ஜான்வி - குஷி
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.
இதில் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர்.
கலாய்த்த சகோதரி
இதற்கென ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் குஷி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டார். அதற்கு அவரின் சகோதரி ஜான்வி கபூர் 'உங்கள் கால்கள் மீது செல்ல வேண்டுமென்றால் ஏணி தான் வைக்க வேண்டும் போல' என்று கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார்.
மேலும், இந்த பதிவுக்கு அவரது தனத்தை போனி கபூர் 'எனது ட்ரில்லியன் டாலர் பேபி' என்று பெருமையுடன் கமெண்ட் செய்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.