வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த மாப்பிள்ளை; 15 வயது மகளுக்கு தந்தை - வைரலாகும் லிப்லாக்!
நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி(39). இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நிச்சயதார்த்த வீடியோ
விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் லிப்லாக் வீடியோ வெளியாகி வைரலானது. இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக நட்பாக பழகி, 3 வருடமாக டேட்டிங் செய்துள்ளனர். நிக்கோலய் மும்பையில் பிரபல தொழிலதிபராக வலம் வருகிறார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், வரலட்சுமியின் வருங்கால கணவர் நிகோலாய் சச்தேவ்விற்கு 41 வயதாகிறது. தொழிலதிபரான இவர் மும்பையில் பெரிய ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து இருக்கிறார். அப்பா, அம்மா தொடங்கிய தொழிலை நிகோலாய் நடத்தி வருகிறார்.
அவருக்கு15 ஆண்டுகளுக்கு முன்பே கவிதா என்பவருடன் திருமணம் நடந்து விட்டது. கவிதா என்பவர் கலிபோர்னியா நாட்டு உலக அழகி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஏற்கனவே நிகோலாய் சச்தேவ்விற்கும் கவிதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டதால் வரலட்சுமிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இருந்தாலும் இவர்களுக்குள் ஈகோ தலைகாட்டாமல் இருந்தால் சரி எனத் தெரிவித்துள்ளார்.