2வது மனைவி; கல்யாணம் குறித்த சலசலப்பு - வெளுத்து வாங்கிய வரலெட்சுமி!

Varalaxmi Sarathkumar Tamil Cinema Marriage
By Sumathi Mar 11, 2024 09:26 AM GMT
Report

நடிகை வரலெட்சுமி சரத்குமார் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

வரலெட்சுமி சரத்குமார் 

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

varalakshmi sarathkumar with fiancee

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியது.

சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கல.. சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது - ஏன்? வரலட்சுமி ஓபன் டாக்

சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கல.. சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது - ஏன்? வரலட்சுமி ஓபன் டாக்

வாழ்க்கை துணை

இதனைத் தொடர்ந்து ஏன் வரலெட்சுமி 2வது திருமணம் செய்கிறார் என கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கேஜ்மென்ட் வீடியோவை வெளியிட்ட வரலெட்சுமி, மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதும் கவலைப்பட மாட்டேன்.

2வது மனைவி; கல்யாணம் குறித்த சலசலப்பு - வெளுத்து வாங்கிய வரலெட்சுமி! | Varalakshmi Sarathkumar Hits Criticized Marriage

அதுபோலத்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக வாழுங்கள் நீங்கள் இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுவதும் பயணிக்க மாட்டார்கள்.

நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கைக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்யுங்கள் என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.