மணக்கோலத்தில் ஆட்டம் போட்ட வரலட்சுமி; ரசிகர்கள் ஷாக் - கூட ஆடியது யார் தெரியுமா?
மணக்கோலத்தில் வரலட்சுமி நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்து திருவுடன் அவர் இணைந்து நடித்து வரும் படத்தில் அவருடன் சந்தோஷ் பிரதாப் நடித்து வருகிறார்.
வைரல் வீடியோ
தொடர்ந்து, மணக்கோலத்தில் சந்தோஷ் பிரதாப், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோருடன் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்களில் அதிர்ச்சியாகி உற்று நோக்கியதில்தான் தெரிந்தது அது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ என்று...
கூடுதலாக, அவரும் இயக்குநர் திரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கேப்ஷன் போட்டு தெளிவுப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil