கமல் கிட்ட வாய்ப்பு கேட்டா.. கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்குறாரு - போட்டுடைத்த வனிதா விஜயகுமார்!
நடிகர் கமல்ஹாசன் குறித்து நடிகை வனிதா பேசியுள்ளார்
வனிதா விஜயகுமார்
சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தொடர்ந்து மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் குறித்து வனிதா பேசியுள்ளார்.
வாய்ப்பு கேட்டேன்
அவர் பேசியதாவது "என் பிறந்தநாள் அன்னைக்கு எனக்கு ஒரு பரிசு வேணும்னு கமல் சாரிடம் கேட்டேன். உடனே அவர் என்னை கட்டிப்பிடிச்சாரு.

இதெல்லாம் எனக்கு வேணாம் சார், இன்னொரு பரிசுதான் வேணும்னு சொன்னேன். உடனே கன்னத்தில் டபால்னு கிஸ் பண்ணிட்டாரு. எனக்கு இதெல்லாம் வேணாம் சார், எனக்கு உங்கக்கூட நடிக்க ஒரு வாய்ப்பு வேணும்னு சொன்னேன்.
கண்டிப்பா தரேன்னு சொன்னாரு. ஆனால் இதுவர கமல் வாய்ப்பே குடுக்கல. அவர் வாய்ப்பு குடுக்குறேன்னு சொல்லிட்டு அல்வாதான் குடுக்குறாரு" என்று வனிதா பேசியுள்ளார்.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil