அவர் Pressure-ல அப்படி பண்ணிட்டாரு; இப்போ கேட்டா அந்தமாரி.. - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Sivakarthikeyan Tamil Cinema Actors Tamil Actors
By Jiyath Jan 13, 2024 04:15 PM GMT
Report

பொல்லாதவன் திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத்சிங் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அவர் Pressure-ல அப்படி பண்ணிட்டாரு; இப்போ கேட்டா அந்தமாரி.. - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்! | Actor Sivakarthikeyan About Director Vetrimaran

மேலும், யோகிபாபு, கருணாகரன், பானுபிரியா, பால சரவணன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், தான் நடிக்க விரும்பும் பிரபல இயக்குநர்களின் திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.

பேட்டி

அப்போது இயக்குநர் வெற்றிமாறன் குறித்து பேசிய சிவா"அவரின் படம்னா, பொல்லாதவன் படத்தில் நடிக்க விரும்புறேன். எனக்கு அந்த படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அவர் Pressure-ல அப்படி பண்ணிட்டாரு; இப்போ கேட்டா அந்தமாரி.. - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்! | Actor Sivakarthikeyan About Director Vetrimaran

பொல்லாதவன் படம் ஒரு ப்ராப்பர் கமெர்ஷியல் படம். அவருடைய படங்கள் எல்லாம் கமெர்ஷியலி வெற்றியடைந்த படங்கள்தான். எனக்கு தெரிஞ்சு வெற்றிமாறன் "முதல் படம் என்னை பண்ண சொல்றீங்க.

மண்டைக்குள்ள ப்ரஷர தூக்கி போடுறீங்க... அதுக்காக இத பண்ணுறேண்டா போங்கடானு" பண்ணிருப்பாருனு நினைக்கிறேன். இப்போ கேட்டா அந்தமாரி பண்ணமாட்டாரு. பொல்லாதவன் படம் கமெர்ஷியலி சூப்பர் படம்" என்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.