அது பண்ணிதான் சினிமால வந்தேன்; அந்த டேரக்டர் கூப்டாரு - ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்!
எப்படி சினிமாவில் அறிமுகமானேன் என்பது குறித்து நடிகை லட்சுமி மேனன் பேசியுள்ளார்
லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார். இவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தான் எப்படி சினிமாவில் அறிமுகமானேன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "நான் சினிமாக்கு வந்ததுக்கு காரணமே டான்ஸ் தான்.
முதல் படம்
ஒரு ஒருமணி நேர டான்ஸ் ப்ரோக்ராம் பண்ணேன். அது ஒரு சேனலில் டெலிகாஸ்ட் பண்ணாங்க. அதைப்பார்த்து தான் மலையாள இயக்குநர் வினயன் அங்கிள் என்னை முதல் படத்திற்கு கூப்பிட்டாரு.
அந்த படத்தில் நான் ஹீரோயினா பண்ணல, ஹீரோயினோட தங்கச்சியா பண்ணேன். அந்த படத்தின் பெயர் "ரகுவிண்டே சொந்தம் ரஸியா".
அந்த படத்திலுள்ள சீன்ஸ்லாம் இயக்குநர் பிரபு சாலமன் சார் பார்த்தாரு. அப்பறம் தான் என்னை கும்கி படத்துக்காக செலெக்ட் பண்ணாரு" என்று பேசியுள்ளார்.