விஜய் எப்பவும் சூப்பர் ஸ்டார்; ஆனா அந்தமாரி விஷயம் நிறைய பண்ணுவாரு - நடிகை சினேகா பளீச்!
நடிகர் விஜய் குறித்து நடிகை சினேகா பேசியுள்ளார்.
நடிகை சினேகா
'என்னவளே' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சினேகா. தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே. சம்பந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஜனா, ஆயுதம், புதுப்பேட்டை, பாண்டி, உன் சமையல் அறையில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், விஜய், அஜித், கமல், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத 'தளபதி 68' படத்தில் சினேகா நடித்து வருகிறார்.
அற்புதமான மனிதர்
சமீபத்தில் இவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசினார். அவர் பேசியதாவது "விஜய் எப்போது ஒரு சூப்பர் ஸ்டார்.
[M09H0Y
என்னோட வீட்ல என்னோட குழந்தைங்க எல்லாருக்கும் அவரை பிடிக்கும். அவர் எப்படி எல்லாரையும் அப்படி அட்ராக்ட் பன்றாருனே தெரியல. அவரோட டான்ஸ், நடிப்பு, பாட்டு எல்லாமே நல்லாருக்கும். அவரும் ரொம்ப அற்புதமான மனிதர்.
ரொம்ப அமைதியா இருப்பாரு, ஆனால் கேமராக்கு பின்னாடி அவ்ளோ அவ்ளோ கியூட்டான விஷயங்கள் பண்ணீட்டு இருப்பாரு. ரொம்ப ஒழுக்கமானவரு விஜய்" என்று சினேகா பேசியுள்ளார்.
You May Like This Video